Uyirullavarai Mp3
ஸ்டார் மீடியா. தமிழ் சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பெருமையுடன் வழங்கும் ”உயிருள்ளவரை ” என்கின்ற. முற்றிலும் ஈழத்தில் படமாக்கப்பட்ட . மண்வாசனை மிக்க ஒரு பாடல். ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் (2015) மூன்றாவது பாடல்.
பாடல் : உயிருள்ளவரை
நடிகர்கள் : சிந்துயன், லோஜினி , சிராஷ் சரவணன்.
பாடல் வரிகள் : தயான் ஷான் .
இசை : வெர்னொன் G சேகரம்
பாடலை. பாடி இருக்கின்றார். ஆனந்த் VS .
இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் : தி.பிரியந்தன் ஸ்டார் மீடியா
ஒப்பனை : K.மைதிலி.
பாடல் ஒலிவடிவம் தயாரிப்பு : Digital Dreams.
தயாரிப்பு : Star Media. அனைத்து ஈழத்து உறவுகளுக்கும் வணக்கம்! ஸ்டார் மீடியா பிரியந்தன் ஆகிய நான் இந்த உயிருள்ளவரை. என்ற வீடியோ பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை பொறுப்பேற்று நிறைவேற்றி இருக்கின்றேன். ஸ்டார் மீடியா நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமாக கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட தேன்சிந்தும் பூக்கள். அலைபாயும் மனசு. நீ தந்த காயங்கள் .மழை நிலா.போன்ற பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஸ்டார் மீடியா தயாரித்து வழங்கி இருந்தது. இவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் YouTube™ வழியாக பார்வையிட முடிந்தது. அந்த வரிசையில் இந்த உயிருள்ளவரை. என்ற ஒளி பதிவினை ( Music Video ) உங்களிடம் சமர்பிப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம். எங்களின் தனித்துவமான படைப்புக்களை பிரசுரிக்கும் பல நூற்றுக்கனக்கான இணையத்தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இப்பாடலில் நடித்த அனைத்து கலைஞர்கள்,ஆதரவாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.